• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

100 வருடங்களுக்குப் பிறகு பெண் வாரிசு பிறந்த குடும்பம்.

April 30, 2016 தண்டோரா குழு

குடும்பத்தில் பெண் வாரிசு இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பல குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால், கடந்த 100 ஆண்டுகளாகப் பெண் குழந்தை வாரிசே காணாத ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்தக் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வடமேற்கு அமெரிக்காவின் இடாஹோ நகரில் உள்ள அன்டர்தால் என்ற குடும்பத்தில் அந்நிகழ்வு நடந்துள்ளது. அக்குடும்பத்தில் சுமார் ஓர் நூற்றாண்டிற்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது 36,500 நாட்கள், 1200 மாதங்கள், 100 வருடங்கள், 1 நூற்றாண்டு கடந்து தற்போது முதன் முதலாகப் பெண் வாரிசு பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு அவுரேலியா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இது குறித்து அவுரேலியாவின் தாய் ஆஷ்டன் அன்டர்தால் கூறுகையில், ‘எனக்குப் பெண் குழந்தை பிறக்கும் என நான் துளியும் நினைக்கவில்லை. அவுரேலியா பிறந்தது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறினார்.

மேலும், அன்டர்தால் குடும்பத்தில் கடந்த 1914ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பெண் குழந்தைகளே பிறக்காதது தொடர்பாக ஆஷ்டன் அன்டர்தாலின் மாமனார் நடத்திய ஆய்வில், அவர்களது குடும்பம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆண்பால் வர்க்கமாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும், தற்போது அவுரேலியா அன்டர்தாலின் பிறப்பு, எங்களுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவுரேலியா அன்டர்தால், தங்கள் குடும்பத்தின் பெண் வர்க்கம் தழைப்பதற்கான விதை எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அன்டர்தால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையான அவுரேலியா அன்டர்தால் பிறந்ததை விசேஷமாகக் கொண்டாட வேண்டும் அக்குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க