100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லதாவர்கள், அதைப் பெறும் வரை ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாயிகள் வங்கி சேமிப்புப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்றாகக் காண்பிக்கலாம்.
பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என மத்திய தலைமைச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது