March 20, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஆட்சியர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தேர்தலில் வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.