• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு – பசுமை தாயகம்

December 14, 2016 தண்டோரா குழு

சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்துள்ளதாக பசுமைத் தாயகம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னையை கடந்த 12-ஆம் தேதி தாக்கிய வர்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

வீடுகள், பேருந்து நிறுத்தங்கள், மின் கம்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, சென்னையின் ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளாக விளங்கி வந்த சிறியதும், பெரியதுமான 5,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன.

சென்னையில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த ஒரு வாரத்தில் சரி செய்துவிட முடியும் என்றாலும் கூட, மரங்கள் வீழ்ந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கடுமையாக உழைத்தால் கூட இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும்.

அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த சென்னை மாநகரில், ஊர்திகள் வெளிவிடும் கரியமில வாயுவை உள்வாங்கி மக்கள் சுவாசிப்பதற்கான உயிர்வளியை வழங்கும் உன்னத பணியை இந்த மரங்கள்தான் செய்து வந்தன. இப்போது ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விட்ட நிலையில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாததாகும்.

தூசு மாசுவால் பாதிக்கப்பட்ட நகரங்களில் சென்னை மாநகரம் தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் காற்று மாசுவும், தூசு மாசுவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ள நிலையில், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மரங்களால் மட்டுமே முடியும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு சென்னையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பசுமைத் தாயகம் அமைப்பு முடிவு செய்திருக்கிறது. சென்னையில் இப்போது நடைபெற்று வரும் புயல் நிவாரணப் பணிகள் முடிவடைந்தவுடன் இந்த பணிகள் தொடங்கி அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க