சமையலில் அசத்தும் 1௦6 வயதான பாட்டி இணையதளத்தில் அவருடைய சமையல் பக்கத்தை உலகின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 2,5௦,௦௦௦ பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குடிவாலா என்னும் இடத்தில் வசித்து வருபவர் மஸ்தான் அம்மா. இவருக்கு வயது 1௦6. இவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தன் வேலைகள் அனைத்தையும் தானே செய்து வருகிறார்.
மஸ்தான் அம்மா சமையல் கலையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். அவருடைய சமையல்கள் அனைத்தும் யூடியூப் இணையதளத்தின் கிராமத்து சமையல் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அவருடைய சமையல் பக்கத்தை சுமார் 25௦,௦௦௦ பேர் பின்தொடர்ந்து உள்ளனர். சுவையான முட்டை தோசை, மீன் வறுவல், மூங்கில் கோழி பிரியாணி ஆகியவை அவருடைய பக்கத்தில் பிரபலமானவை.
மஸ்தான் அம்மாவின் யூடியூப் சமையல் பக்கத்தை அவருடைய கொள்ளு பேரன் கே. லக்ஷ்மன் கவனித்து வருகிறார். மேலும், அவருடைய சமையல் பக்கத்தை பார்க்கும்போது, மஸ்தான் அம்மா உலகின் பல பகுதியிலிருந்து மக்களுடைய அன்பையும் நல்மதிப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது