• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது” – தொழில்துறை அமைச்சர்

March 22, 2017 தண்டோரா குழு

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டப்பேரவையில் பேரவையில் புதன்கிழமை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது;

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதை கண்டறிந்து, நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளது.

நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்க மறுத்து பிப்ரவரி 16-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதன் அடிப்படையில், பிப்ரவரி 25-ம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து தமிழக முதல்வரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனடிப்படையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மேற்படி திட்டத்தினால் அவர்களது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.

இதுக்குறித்து போராட்டக் குழு பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர் பேசுகையில்

“மக்களின் விவசாயத்திற்கோ, அவர்களது வாழ்வாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசு எவ்வித அனுமதியும் வழங்காது” என்று உறுதி அளித்தார்.

தமிழக அரசு, விவசாயிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது. நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.”

மேலும் படிக்க