• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயிகளின் பாதிப்பு குறித்து நடிகர் பிரபு

February 28, 2017 தண்டோரா குழு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு வரும் என்றால் அதைத் தமிழக அரசு கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கேட்டுக் கொண்டார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தவுள்ள மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால் அதைக் தமிழக அரசு கவனத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்றால் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து மக்களுக்கு விளக்கம் வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.” என்றார்.

நடிகை பாவனா அண்மையில் கேரளத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து நடிகர் பிரபுவிடம் கேட்டபோது, “நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவைக் வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. அவர் மிகவும் தைரியமான பெண்மணி. தொடர்ந்து பெண்களுக்குப் பாலியல் துன்பறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள்தான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்மகனும் பெண்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும்” என்று பிரபு கூறினார்.

மேலும் படிக்க