• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை இன்று ஆய்வு செய்கிறார் ராணுவ தளபதி !

December 13, 2021 தண்டோரா குழு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஆய்வு செய்கிறார்.

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், விமானப் படை தரப்பில் இருந்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விமான விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குன்னூருக்கு வருகிறார். முதலில் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

பின்னர், பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதிக்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

மேலும் படிக்க