• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்காக தியான அஞ்சலி !

December 20, 2021 தண்டோரா குழு

ஹோப்ஸ் காலேஜ் பகுதியிலுள்ள “பிரம்மா குமாரிகள்” நிலையத்தில் குன்னூர் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்காக தியான அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 8 ம் தேதி குன்னூர் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த இந்திய நாட்டின் முப்படை தளபதி திரு. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் இருவர் மட்டுமின்றி அவருடன் பயணித்து வீரமரணம் அடைந்த 12 இராணுவ அதிகாரிகள் அவர்களது ஆத்மா அமைதி அடையவும் மற்றும் அவர்கள் செய்த தேச சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் நேற்று மாலை கோவை பீளமேடு ஹோப்ஸ் பிரம்மா குமாரிகள் தியான நிலைய அமைப்பின் சார்பாக தியான அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரம்மாகுமாரிகள் தியான நிலையத்தின் பொறுப்பு சகோதரி கல்பனா, அவருடன் இணைந்து சேவை செய்யும் சகோதரி சித்ரா மற்றும் நிலையத்தை சார்ந்த உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக கோவையை சேர்ந்த சில இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தேசத்திற்காக வீர மரணம் அடைந்தவர்களுக்கு தியான அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பொது மக்களும் மறைந்த வீரர்களுக்கு தியான அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க