March 8, 2018
தண்டோரா குழு
பெரியார் குறித்து பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறிய கருத்து காட்டுமிராண்டிதனம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரும் அந்த பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், பெரியார் சிலை அகற்ற வேண்டும் என பேசியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம் என கூறினார்.