April 21, 2018
தண்டோரா குழு
திமுக தலைவரையும்,மகளிரணி செயலாளரையும் இழிவுபடுத்தி பதிவிட்ட ஹெச்.ராஜாவை கைதுசெய்யக்கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரிடம் திமுக மகளிரணியினர் இன்று(ஏப் 21) புகார் மனு கொடுத்தனர்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வன்முறையாக பதிவிட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கும் ஹெச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் காவல் துறையிடம் பல வழக்குகள் மற்றும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் திராவிட இயக்கத்தலைவரையும், மகளிரணி செயலாளருமான கனிமொழியை இழிவுபடுத்தி பதிவிட்ட ஹெச். ராஜாவை கைது செய்யக்கோரி மாநகர காவல் துறை ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.