• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் சார்பில் கோயிலுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கழிப்பறைகள்

June 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் சார்பாக ரூபாய் 4 லட்சம் மதிப்பில் குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகள் கோயிலுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் சார்பாக இரண்டாவது நிரந்தர சேவை திட்டமாக கோவைப்புதூரில் அமைந்துள்ள வேணுகோபால் ஸ்வாமி திருக்கோயில் வளாகத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் இரண்டு குளியல் அறைகள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக கோவில் கமிட்டி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாசகரி துவக்கி வைத்தார். இதற்கான நிதி உதவியை மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி செய்திருந்தார்.இதில், மாவட்ட அமைச்சரவை செயலாளர் கோமதீஸ்வரன், மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன், வட்டார தலைவர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் நிதிஷ் குட்டன், ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கத்தின் தலைவர் டி எஸ் குட்டன், செயலாளர் குமரேசன் மயில்சாமி, மற்றும் உறுப்பினர்கள் ஜெயகிருஷ்ணன், விஜயலட்சுமி, ஜெயஸ்ரீ உட்பட ஹில் சிட்டி அலையன்ஸ் சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க