February 6, 2018
தண்டோரா குழு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி அளிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பல்வேறு தரப்பினர் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அதற்கு தேவையான நிதியில் ரூ. 1 கோடி மட்டும் பாக்கி இருந்தது.
இந்நிலையில்,ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி அளிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவது தமிழர்களுக்கு இனிமையான செய்தி என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.