• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹார்வர்டு பல்கலைக்கழக அமைப்பின் தலைவராக தமிழ் மாணவி தேர்வு !

November 23, 2018 தண்டோரா குழு

புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புத் தலைவராக ஸ்ருதி பழனியப்பன் என்ற தமிழ் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவர் பதவிக்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஸ்ருதி பழனியப்பன் 41.5 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். இவருடன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜூலியா ஹியூசா என்ற மாணவியும் வெற்றிப் பெற்றுள்ளார்.

அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படவேண்டும் என்பதை முக்கிய கொள்கையாக கொண்டுள்ள ஷ்ருதி. ‘make Harward home’ என்ற முழக்கத்தை முக்கியமானதாக வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அமெரிக்க ஜனநாயக கட்சியின் மிக இளம்வயது பிரதிநிதியாக ஷ்ருதி பழனியப்பன் இருந்தார். இவர் 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வசித்துவருபவர் பழனியப்பன். இவர் கடந்த 1992ம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார். இவருடைய மகள் ஷ்ருதி பழனியப்பன். 20 வயதே ஆன இவர், புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க