March 8, 2018
தண்டோரா குழு
ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அகிலா என்ற பெண் இந்து மதத்தில் இருந்து மாறி, ஹதியா என்று பெயரை மாற்றிக்கொண்டு, இஸ்லாமிய இளைஞரான ஷபின்ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் தனது மகளை மூளை சலவை செய்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டாக ஹதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் அவர்களது திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து ஹதியாவின் கணவர் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹாதியா திருமணம் செல்லும். ஹதியா திருமணம் செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவிப்பதற்கு அதிகாரம் இல்லை. கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஹதியாவுக்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.