• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்வராஜ் நிறுவனத்தின் ப்ரோ கம்பைன் 7060 ட்ராக்டு ஹார்வெஸ்டர் அறிமுகம்

September 29, 2021 தண்டோரா குழு

ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களை உரிய மிகத்தரமான தானிய விளைச்சலின் அளவை மேல் அதிகரிப்பதோடு, தமிழ்நாட்டிலுள்ள நெல் விவசாயிகளுக்கு மேம்பட்ட உற்பத்தித் திறன், செயல்திறன், செயல்பாட்டில் எளிமையை அளிக்கவிருக்கிறது ஸ்வராஜின் அறுவடை எந்திரமான புதிய ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060.

நெல் வெட்டுவதற்கான புதிய வெட்டுக்கம்பி பொருத்தப்பட்ட புதிய ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060, ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த விலையில் முற்றிய நெற்பயிரைத் தொடர்ச்சியாகத் திறம்பட வெட்டும் திறன் கொண்டது.

நெல் மற்றும் சோயாபீனை திறம்பட அறுவடை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஸ்வராஜின் இந்த புதிய கம்பைன் ஹார்வெஸ்டர், மிகக்குறைவான தானிய இழப்பு மற்றும் சேதாரத்துடன் அறுவடையை, களை நீக்குதலை, கதிரடித்தலைத் திறம்படச் செயல்படுத்துகிறது.

கரடுமுரடான,ஆற்றல்மிக்க,எரிபொருள் திறன்மிக்கவகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 நம்பகமானது, ஒரு 72ஹெச்பி அட்2300ஆர்பிஎம் என்ஜின் பொருத்தப்பட்டது. குறைவான தேய்மானத்தை தரும் உறுதியான குறைவான விகிதக் குறைப்பு கியர் பாக்ஸ் மற்றும் குறைவான வேகமுள்ள, அதிக முறுக்குவிசை கொண்ட ஹைட்ராலிக் மோட்டார் ஆகியன ஒரு நீண்ட கால பயன்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. பாதுகாப்பில் கவனம் செலுத்தும் விதமாக, வயல்வெளியில் தாழ்வாகத் தொங்கும் மின் கம்பிகளில் இருந்து மின்கசிவு ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒரு ஓவர்ஹெட் கார்டும்இந்த ஹார்வெஸ்டரில் உள்ளது.

இது பற்றி எம் அண்டு எம் நிறுவனத்தின் ஸ்வராஜ் பிரிவுக்கான தலைமை நிர்வாக அலுவலர் ஹரிஷ் சவான் பேசுகையில்,

அறுவடைக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தொழில்நுட்பப் பயன்பாடு விவசாயத்தில் பெருகிவரும் சூழலில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 கிடைக்கச் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்; முழுமையான கள விற்பனை, சேவை மற்றும் முக்கியமான நேரத்தில் உதிரிபாக உதவிகள் போன்றவற்றை அளிக்கவிருக்கிறோம்.

குறைவான கழிவு மற்றும் செயல்பாட்டு நேரத்தினால் விவசாயிகளுக்குப் பெருமளவு வருமானத்தை உறுதி செய்யும் வகையில், எங்களது புதிய தயாரிப்பான அதிகபட்ச செயல்திறன், தரம் மற்றும் அறுவடையை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள மிகப்பரந்தளவிலான ஸ்வராஜின் சில்லறை விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க் வழியாக ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 விற்பனை செய்யப்படுகிறது, அனைத்து சேவைகளும் வழங்கப்படுகின்றன. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் ஹார்வெஸ்டரை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் நிதியுதவி மூலம் வாங்கலாம். ஈரமான, மிதமான வயல்வெளிக்கு ஏற்ற ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060 ஒரிஸா, மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானாவிலும் கிடைக்கும்.

உறுதியான, நம்பகமான ஹார்வெஸ்டர்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற ஸ்வராஜின் மரபில் மேலுமொன்றாகச் சேர்ந்துள்ளது ஸ்வராஜ் ப்ரோ கம்பைன் 7060. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் முதலாவது ஹார்வெஸ்டரை அறிமுகப்படுத்திய ஸ்வராஜ், இன்று இந்தியாவில் அறுவடை தொழில்நுட்பத்தில் முன்னிலை பெற்று விளங்குகிறது; பஞ்சாப்பிலுள்ள மொஹாலியில் சக்கரங்கள், தடங்கள், டிராக்டர் பொருத்தப்பட்ட ஹார்வெஸ்டர்கள் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க