• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது வெளிப்படுவார்கள்– டிடிவி தினகரன்

February 10, 2018 தண்டோரா குழு

ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது வெளிப்படுவார்கள் என ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினார்.புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழிபாடு நடத்திய பின், ஏழை எளியோருக்கு மூன்றுசக்கர வண்டிகள், தையல் எந்திரங்கள், குக்கர் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியர் பதில்சொல்ல வேண்டி வரும். தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி பா.ஜ.,வின் கிளை நிறுவனமாக செயல்படுகிறது. ஆர்கே நகரில் மக்கள் ஓட்டு போடாததால் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டது. வைரம் எடுக்கும் திட்டமாக இருந்தாலும் மக்கள் விரும்பாத திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. ஓபிஎஸ்சின் தர்மயுத்தம் ஒரு டுபாக்கூர் யுத்தம். பதவி பெறுவதற்காக தான் அது நடந்தது. ஓ.பி.எஸ்., உறவினர்களே தற்போது பதவியில் உள்ளனர் என்றார்.

மேலும், இந்த ஆட்சி 2 அல்லது 3 மாதத்தில் முடிந்துவிடும். ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது வெளிப்படுவார்கள் எனக் கூறினார்.

மேலும் படிக்க