July 16, 2018
தண்டோரா குழு
தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.இதுமட்டுமின்றி இவர் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள்,இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,ஸ்ரீ ரெட்டி இன்று நடிகரும்,இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால்,இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சுந்தர்.சி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும்,ஸ்ரீ ரெட்டி கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.விரைவில் வழக்கு தொடர்வோம் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து,சுந்தர்.சி குறித்து தாம் செய்த பதிவுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப் போவதாக ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்னொரு பதிவையும் போட்டுள்ளார்.