• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு- 2024”

October 26, 2024 தண்டோரா குழு

முனைவர் இ.பாலகுருசாமியின், இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் இன்று (26.10.2024) நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி வரவேற்றார். கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் முனைவர் பி.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர் பி.தியாகராஜன், வழக்கறிஞர் கே.சுமதி, ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் முன்னாள் செயல் அலுவலர் வெங்கட்ராமன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், மாநாட்டு செயலர் முனைவர் பிந்து விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தரராமன் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுடெல்லி பொது கொள்கை விரிவுரையாளர் வினிதா ஹரிஹரன், சாந்தி ஆஸ்ரம் தலைவர் முனைவர் வினு அரம், காவல்துறை முன்னாள் தலைவர் ஏ.பாரி, ஐ.சி.சி.சி., மண்டலத் தலைவர் ஏ.நடராஜன், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் கவிதாசன், இந்திய பெண் தொழில்முனைவோர்கள் அமைப்பின் நிறுவனர் திருமதி மீனாட்சி சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.

மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் சி.எஸ்.ஓ., முனைவர் எஸ்.பாலுசாமி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பி.கீதாலட்சுமி சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் சி.சுகுமாரன் நன்றி கூறினார்.

மேலும் படிக்க