• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்

July 5, 2025 தண்டோரா குழு

கோவை க.க.சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் P.சாத்துகுட்டி தலைமையுரை வழங்கினார்.

செயலர் P.ஸ்ரீஹரி,துணைத் தலைவர் சைலஜா வேணு,தலைமை செயல் அதிகாரி T.K அஸ்வின், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் D. கல்பனா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் R.பிரேம்குமார், கலந்து கொண்டார்.

இவர் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் குறிக்கோள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
மாணவர்களின் ஒழுக்கமும் நாகரீகமும் மட்டுமே சமுதாயத்தை உயர்த்தும் என்றும் விளக்கி கூறினார்.உணவு உடை நாகரிகம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் மாணவர்கள் மிகச் சிறந்து விளங்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

இவரது உரையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசையில் இடம் பெற்ற 62 மாணவர்களுக்கும்,இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு 700 மாணவர்கள் தங்களது பட்டங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.

மேலும் படிக்க