July 6, 2025
தண்டோரா குழு
சத்தீஸ்கர் மாநிலம்,விலாஸ்புரியில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடத்தின் ஆட்சியாளரும்,உயர்தர ஆன்மிக துறவியுமான ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், ஜூலை 9, 2025 அன்று கோவைக்கு வருகை தர இருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவத்தை முன்னிட்டு, ஸ்வாமிகள் ஜூலை 10 முதல் செப்டம்பர் 7 வரை – மொத்தம் 65 நாட்கள், கோவையின் ராம் நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் தங்கி, தினசரி வ்யாச பூஜையுடன் கூடிய வ்ரத பூஜைகளை நடத்தவுள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்:
தினசரி காலை & மாலை நேரங்களில் ஸ்வாமிகள் கரங்களால் பூஜை,வேத சொற்பொழிவுகள்,கர்நாடக இசை கச்சேரிகள்,சிறப்பு ஹோமங்கள் மற்றும் யாகங்கள்.
பக்தர்கள் கவனத்திற்கு
ஸ்வாமிகள் வருகையை முன்னிட்டு, கோவையில் பெரிய அளவில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த புனித வாய்ப்பை அனைத்து பக்தர்களும் அனுபவித்து ஆன்மிக வளர்ச்சிக்காக பயன்பெறுமாறு வேண்டுகிறோம் என கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மளிகைப் பொருட்கள், பழம், காய்கறிகள், பூ, பூஜைத் திரவியங்கள் போன்றவற்றை தானமாக வழங்க விரும்புவோர், கோயில் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
துவக்கம்:ஜூலை 10, 2025
இடம்: ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில், ராம் நகர், கோவை