கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ சி டி அகாடமி எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டின் துவக்க விழா கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ஜேனட் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலமாகிய எஸ் மலர்விழி நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, இளைஞர்கள் எவ்வாறு தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் ஆதித்யா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார். ஐசிடி அகாடமி தலைமை செயலாளர் பாலசுந்தர் மாநாட்டிற்கு முதன்மை உரையாற்றினார்.
காக்னிசென்ட் நிறுவனத்தின் அரசு தொடர்பான மாநில மென்பொருள் சேவை துறையின் தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். இந்த இளைஞர் தலைமை பண்பு மாநாட்டில் தலைமை விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு தலைமை உரையற்றினார்.
விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் டீன்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்