• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகள்

June 3, 2021 தண்டோரா குழு

கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சராகம், கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நட்டியது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சராகம், கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியுடன் இணைந்து அனுசரித்தது. இதில் இவரின் ஞாபகமாக 200 மரக் கன்றுகளை இக் கல்லூரி வளாகத்தில் நட்டினார்கள்.

இம்மரம் நடும் நிகழ்ச்சியில், இக் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர். எஸ்.மலர்விழி முன்னிலை வகிக்க, கோவை, வனக்கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் நடப்பட்டது.

இதில் இக் கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.கே.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆளவந்தார்,வனச்சரக அலுவலர், கல்லூரியின் நிர்வாக அலுவலர் கலந்துகொண்டனர்.

இதில் வேம்பு, புங்கன், மகாகனி உட்பட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டது. இதை முழுமையாக வளர அனைத்து பராமரிப்பினையும் செய்யவுள்ளது. மேலும் இக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, நடிகர் விவேக் போன்ற பிரபலமானவர்கள் இக் கல்லூரியில் நட்டிய அனைத்து மரங்களும் முழுமையாக வளர்ந்து பராமரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க