• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

December 23, 2021 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை சார்பாக கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப் பட உள்ளது.
பண்டிகையில் மிக முக்கியமாக கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை சார்பாக கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.கல்லூரியின் தாளாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இதில் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கோவை ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலின் பொது மேலாளர் சுமான்சி திவாரி கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடையே உரையாடினார்.

தொடர்ந்து விழாவில்,கேக் தயாரிப்பதற்கு தேவையான உலர் திராட்சை,முந்திரி, தயாரிக்கும் கலவையில் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்தா பழங்கள், ஆரஞ்சு தோல், கருப்பு கரும்பு, அத்திப்பழம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டு கேக் தயாரிக்கும் பணியில் துறை சார்ந்த மாணவ,மாணவிகள் ஈடுபட்டனர்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் பேபி சக்கீலா, துறை தலைவர் சதீஷ் குமார் உட்பட மாணவ,மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க