• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மைல் என்ற நிகழ்ச்சி மூலம் புற்றுநோயாளிகளை மகிழ்வித்த தன்னார்வ அமைப்பினர்

November 10, 2018 தண்டோரா குழு

உலகம் முழுவதம் அக்டோபர் மாதம் உலகளாவிய புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் ரோட்ராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனி, கோவை regional கேன்சர் சென்டருடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ஸ்மைல்” என்ற தலைப்பில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று நடத்தியுள்ளனர்.

இதில் சுமார் 160 புற்றுநோயாளிகள் 70 உதவியாளர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் comedy processing unit சேர்ந்தவர்கள் பல நகைச்சுவை விருந்தினை புற்றுநோயளிகளுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தனர். இந்நிகழ்சியின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து உள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து ரோட்ராக்ட் கிளப் ஆப் சாய்பாபா காலனியின் தலைவர் Rtr.உதயகுமார் கூறுகையில்,

இந்த நிகழ்ச்சியானது கேன்சர் நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் மகிழ்விக்கும் நோக்கதிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. கேன்சர் ஒருவருக்கு வரும் போது மரணம் நிச்சயம் என்ற கருத்து மனதில் உள்ளது அதனை மற்றும் நோக்கத்தில் இந்த ஸ்மைல் நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். இதில் கலந்து கொண்ட புற்றுநோயாளிகள், இது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மருத்துவமனைக்கு வரும் பொழுது ஒரு பயத்துடன் தன் வரவேண்டியுள்ளது ஆனால் இன்று இந்த ஸ்மைல் காமெடி நிகழ்ச்சி பார்த்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது என்று எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் எதிர் பார்த்ததை விட நிறைய பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இது எங்கள் முதல் முயற்சி நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இனி வருடம் தோறும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

மேலும் படிக்க