• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பற்றி அஸ்வின் சாதனை

March 25, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் ஒரு டெஸ்ட் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் கிரிகெட் போட்டி ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு 2016-17 டெஸ்ட் சீசனில் அஸ்வின் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 79 ஆனது.

அஸ்வின் ஸ்மித்தின் விக்கெட்டைக் கைப்பறியதன் மூலம் கடந்த 2007/08 சீசனில் 78 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினின் சாதனையைமுறியடித்தார். உலகின் முதல்நிலை வீரரான ஜடேஜா நடப்பு சீசனில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க