April 24, 2021
தண்டோரா குழு
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரங்கில் பொதுமக்களுடம் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள குறைகளை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர்.அப்போது குறைகள் அனைத்தும் கூடிய விரையில் சரி செய்து தரப்படும் என்று கூறினார்.
மேலும் பொதுமக்களிடம் பேசிய அவர்,
கோவை நகரம் தான் மற்ற நகரங்களை காட்டிலும் தனி மனித வருமானம், வரி வசூலில் ஒரு படி மேலுள்ளது.ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து எதிர்ப்புகள் மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வராமல் சமூக வலைதளங்களில் தெரிவிப்பது இங்கு பணிபுரிவொருக்கு மன உளைச்சலை தருவதாகவும் இந்த செயலை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
மேலும் பணிகள் நிறைவந்ததும் முன்பு இருந்ததை விட இப்பகுதி பசுமையாக காணப்படும் என்றும் கூறினார். இனி மாதந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களை சந்தித்து கருத்து கேட்பர் என்றும் கூறினார்.