• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடைத்தால் இனி கவலை வேண்டாம்

April 5, 2017 தண்டோரா குழு

ஆண்ட்ராய்டு போனின் அசூர வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப அதன் விலையும் உள்ளது.

பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் போனை தங்களை அறியாமல் கீழே விட்டுவிவார்கள் இதனால் அதன் டிஸ்பிளே தான் முதலில் உடைந்து விடும். இப்போது உள்ள நிலையில் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உடைந்து போனால் ஒன்று நீங்கள் ரிப்பேர் செய்ய கடைக்கு போக வேண்டும். அல்லது போனை மாற்ற வேண்டும்.

இதற்கு தீர்வு காணும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஷூ வாங்க் மற்றும் அவரது குழு,போனின் டிஸ்பிளே துண்டு துண்டாக உடைந்தாலும் தானாக சரியாகிக் கொள்ளும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக பாலிமர் மற்றும் அயனிக் உப்பினை சேர்த்து, நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய புதிய டிஸ்பிளேவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உடைந்த டிஸ்பிளே தானாக ஒன்றுசேரும் வகையிலான புதிய எலக்ட்ரிசிட்டி மெட்டீரியலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதன்படி 50 முறை கீழே போட்டு உடைத்தாலும் டிஸ்பிளே பழைய படி ஒன்று சேர்ந்து விடும்.

போன் கைதவிறி கிழே விழும் போது டிஸ்பிளேவில் கீறல் விட்டு விடும் அல்லது டிஸ்பிளே சிதறிவிடும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பத்தின் படி 24 மணி நேரத்தில் தானாகவே பழைய படி டிஸ்பிளே மாறிவிடும். விஞ்ஞானிகள் அதற்காக பல்வேறு கட்டசோதனைகளை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் மெட்டீரியல் எல்ஜி ஜி பிளக்ஸ் போனின் பின் பக்கத்தில் உடைந்தால் ஒன்று சேரும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அது எலக்ட்ரிசிட்டி மெட்டீரியல் கிடையாது.

இதனால் மொபைல் உற்பத்தியாளர்கள் இந்த மெட்டீரியலை பயன்படுத்தவில்லை. பெரும்பாலான போன்களின் டிஸ்பிளே எலக்ட்ரோடுகள் உள்ள கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டவை. உங்கள் விரல் மின்கடத்தியாக செயல்பட்டு டிஸ்பிளேவில் உள்ள பங்சன்களை செயல்பட வைக்கிறது.

கீறல்களை தானாக சரிசெய்துகொள்ளும் மெட்டீரியல் போனின் டிஸ்பிளே மற்றும் பேட்டரியில் வரும் 2020ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க