January 31, 2018
தண்டோரா குழு
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் பழமையான மனிதர் தனது 113வது வயதில் நேற்று(ஜன 30) காலமானார்.
ஸ்பெயின் நாட்டைச், சேர்ந்த விவசாயி பிரான்சிஸ்கோ ‘உலகின் பழமையான மனிதர்’ என்று கருதப்பட்டார்.கடந்த 1904ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பிறந்த பிரான்சிஸ்கோ, ஸ்பெயின் நாட்டின் கலைஞரான ‘மார்சென்ஸா’ என்பவரின் முக சாயலை கொண்டதால், கிராமத்து மக்கள் அவரை ‘மார்சென்ஸா’ என்று அழைத்தனர்.
கடந்த 1988ம் ஆண்டு தனது மனைவியை இழந்த அவர்,தன்னுடைய நிலத்தில் வளர்ந்த காய்கறிகளை உண்டும், தினமும் சிவப்பு ஒயின் அருந்தி வந்தார்.ஆலிவ் எண்ணை மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டியை தனது காலை உணவாக உண்டு வந்தார். தனது 107வயது வரை, தினமும் காலை நடைப்பயிற்சியை மேற்கொண்டார். தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு இவை தான் காரணம் என்று கடந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாடத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.