• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்பின்னி எனும் பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்க, விற்க புதிய ஷோரூம் கோவையில் துவக்கம்

April 20, 2022 தண்டோரா குழு

இந்திய அளவில் பிரபலமான ஸ்பின்னி எனும் பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்க மற்றும் விற்பதற்கான புதிய ஷோரூம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் கார்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதிலும் அதிகம் பேர் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். இந்நிலையில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடந்த 2015 முதல் பயன்படுத்தபட்ட கார்களை வாங்க மற்றும் விற்பதற்கான தளமாக ஸ்பின்னி செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 22 நகரங்களில் தனது சேவையை வழங்கி வரும் ஸ்பின்னி தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் தனது சேவையை துவக்கி உள்ளது.கோவை அவினாசி சாலையில் உள்ள பன் ரிபப்ளிக் மால் வளாகத்தில் துவங்கியுள்ள இதன் ஷோரூமில் ஸ்பின்னியின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான நீரஜ் சிங் தலைமையில் கோவை கிளை மேலாளர் விக்னேஷ் ராமலிங்கம் பேசினார். ஒன் டச் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் கார்களை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் வகையில் இதன் இணையதளம் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் புதிய தொழில்நுட்பம் வீட்டிலிருந்து கார்களை வாங்கவும் விற்கவும் உதவுகின்றன.

இது எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லாத மற்றும் முற்றிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னோடியாக உள்ளது. இதற்கான முழு செயல்முறையும் ஆன்லைனில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளதோடு. ஒவ்வொரு கார்களையும் பார்வையாளர்கள் 360 டிகிரி கோணத்தில் முழுமையாக பார்க்கலாம்.

ஸ்பின்னி அஷ்யூர்டு காருக்கான கட்டணம் பெறப்பட்டதும் , வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் அந்த கார் உடனடியாக டெலிவரி செய்யப்படும்..மேலும் நேரடியாகவும் பன் மாலில் உள்ள தங்களது ஷோரூமில் நேரடியாக பார்த்தும் வாங்கலாம் எனவும்,தெரிவித்தனர்.

மேலும் படிக்க