• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்பின்னியில் சச்சின் டெண்டுல்கர் முதலீடு – ஸ்பின்னியின் கேப்டனாக பொறுப்பேற்பு

December 14, 2021 தண்டோரா குழு

பயன்படுத்திய கார்களை வாங்கவும், விற்கவும், நேரடியாகவும் ஆன்லனிலும் முன்னோடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஸ்பின்னி. இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் இதன் பங்குதாரராக சேர்ந்துள்ளார்.

ஒரு தீவிர முதலீட்டாளராக மட்டுமின்றி, பிராண்ட் மேம்பாட்டுக்காகவும் செயல்படுபவர். இவரோடு இணைந்து, மீண்டும் ஒரு புதிய சகாப்த்தை ஸ்பின்னி இளைய தலைமுறைக்காக, அவர்களது கனவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. மகிழ்ச்சியோடு பயன்படுத்திய கார்களை வாங்கவும், விற்கவும் சிறப்பான அனுபவங்களை தர உள்ளது. உயர்ந்த அளவில் நேர்மை கொண்டவர்.

சச்சின் டெண்டுல்கர் உயர்ந்த சிறப்பான செயல்பாடுகளுக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். அவரது உயர்ந்த குணத்தை இளைஞர்களும் பெறவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்பின்னி அவரை தேர்வு செய்துள்ளது. அவரின் செயல்திறன், பரந்த மனப்பான்மை, மற்றும் தொடர் முன்னேற்றம் உலகிற்கு முன்மாதிரியாக விளங்கும்.

இந்த நிகழ்வில் பேசிய சச்சின் பேசுகையில்,

“நமதுநாடு இளமையாக மாறி வருகிறது. நமது நோக்கம் பெரியதானது. இன்றைய தொழில்முனைவோர், இந்த இலக்கிற்கு ஏற்ற வகையில் தீர்வுகளை நாம் உருவாக்கி வருகின்றனர். இ்த்தகைய சரியான தீர்வை உருவாக்க ஸ்பின்னி அணியுடன் இணைந்து செயல்படுவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகத்தில் சிறப்பாக செயல்பட இந்த அணி நேரத்தின் மதிப்பை அறிந்து செயல்படுகிறது. மதிப்பு, வெளிப்படை தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த குடும்பத்தில் ஒருவராக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும் சிறப்பாக செயல்படுவோம்,” என்றார்.

ஸ்குவாட் ஸ்பின்னி அணியின் தலைவராகவும் முதலீட்டாளராகவும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கரை வரவேற்று, நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான நிராஜ் சிங் பேசுகையில்,

“இவரது வாழ்க்கையும் பயணமும் அதில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள தேவையான உறுதியும் எல்லோருக்கும் கலங்கரை விளக்காக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை தீர்க்க, நம்மால் இயன்ற அனைத்தையும் திறமைகளை பயன்படுத்தி மேற்கொள்வோம். ஸ்பின்னியுடன் அவர் பயணிப்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஸ்குவாட் ஸ்பின்னியின் புதிய கேப்டனாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கரை வரவேற்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

இதற்கு முந்தைய ஆண்டில், ஸ்பின்னி மதிப்புமிக்க அமைப்பை ஆதரிப்பவரும், நம்பிக்கை கொண்டுள்ளவருமான பி.வி சிந்துவுடன் இணைந்து இந்த பிராண்டை அறிவித்தோம். இனி வரும் ஆண்டுகளில், ஸ்பின்னி வாடிக்கையாளர்கள் இன்னும் பல பிரபலங்களுடன் பயணிப்பர். ஸ்குவாட் ஸ்பின்னியின் தளபதியாக செயல்படுபவர், தொடர்ச்சியான பல சந்தை முயற்சிகளையும், பில்லியன் கார் பரிமாற்ற கனவை, நனவாக்குவார்.

மேலும் படிக்க