• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பதவியேற்பு

April 28, 2021 தண்டோரா குழு

ஸ்டெல்லான்டிஸ் இந்தியா அண்டு ஆசியா பசிபிக், இந்தியா மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்திற்குள், தனது செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக முக்கிய தலைமை நிர்வாகிகள் நியமனம் குறித்து அறிவித்துள்ளது.

ரோலண்ட் பசாரா இந்தியாவில் ஸ்டெல்லான்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஜீப் மற்றும் சிட்ரோய்ன் ஆகியவற்றின் தேசிய விற்பனை நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கான முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இப்பொறுப்புடன் இக்குழுமத்தின் உற்பத்தி செயல்பாடுகளையும் கவனித்து கொள்வார்.

2017-ம் ஆண்டிலிருந்து, ரோலண்ட் இப்பிராண்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த துணைத்தலைவராக சிட்ரோய்ன் இந்தியா செயல்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்தியிருக்கிறார், சிட்ரோய்ன் பிராண்டின் சமீபத்திய அறிமுகம் மற்றும் இந்தியாவில் அதன் முதல் தயாரிப்பான சிட்ரோய்ன் சி5 ஏர்க்ராஸ்-ன் உற்பத்தி முதல் விற்பனை வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

ரோலண்ட், சர்வதேச வாகனத்துறை மற்றும் ஆலோசனை வணிகங்களில் ஆழ்ந்த மற்றும் பல்வேறு பிரிவுகளில் பெரும் அனுபவம் கொண்டவர். 2017-ம் ஆண்டில் குரூப் பி.எஸ்.ஏ-வில் இணைவதற்கு முன்பு, ரெனோ நிறுவனத்தில் பல முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்திருக்கிறார், நிர்வாக இயக்குனர் இங்கிலாந்து, ஐரோப்பா என்.எஸ்.சி தலைமை நிர்வாகி (ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலி) மற்றும் ஆசியா பசிபிக் மற்றும் சீனாவுக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ரோலண்ட் வகித்திருக்கிறார்.

டாக்டர் பார்த்தா தத்தா, இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொறியியல், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.2019 முதல் டாக்டர். பார்த்தா, எஃப்சிஏ இந்தியா-வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முன்னெடுத்து வழிநடத்தியிருக்கிறார். அப்போது அவரது தலைமையில் புதிய ஜீப் காம்பஸ் மற்றும் உள்நாட்டிலேயே ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்ட ஜீப் ராங்கலர் ஆகியன வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

டாக்டர். பார்த்தா, 1999-ல் எஃப்.சி.ஏ-ல் பொறியாளராக சேர்ந்தார். கடந்த இருபது ஆண்டுகளில், சர்வதேச தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள், நிர்வாகம், வணிக மேம்பாட்டுத் திட்டங்கள், பொறியியல் மற்றும் வாகன ஒருங்கிணைப்பு ஆகிய பிரிவுகளில் மூத்த தலைமை நிர்வாக பதவிகளில் பணியாற்றியுள்ளார். எஃப்.சி.ஏ.யில் அவர் பணிபுரிந்த காலத்தில், சென்னை மற்றும் புனேவில் உள்ள தொழில்நுட்ப மையங்களின் இயக்குநராகவும், சீனாவில் தயாரிப்பு பொறியியல் பிரிவு தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

ஸ்டெல்லான்டிஸ் இந்தியா அண்டு ஆசியா பசிபிக், தலைமை செயல்பாட்டு அதிகாரி கார்ல் ஸ்மைலி புதிய தலைமை நிர்வாகிகளின் நியமனங்கள் குறித்து இன்று அறிவித்தார்.
ரோலண்ட் மற்றும் பார்த்தா ஆகிய இருவரும் ஸ்டெல்லான்டிஸில் ஏற்கும் புதிய பொறுப்புகள் குறித்து அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

பெரும் திறமை வாய்ந்த சர்வதேச விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் நிர்வாகியான ரோலண்ட், இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக தனது புதிய பொறுப்பிற்கு ஆழ்ந்த வணிக அனுபவத்தின் அனுபவ வளத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.இந்தியாவில் ஸ்டெல்லான்டிஸின் பிராண்டுகள், நெட்வொர்க் மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துதிலும் விரிவாக்கத்திலும் இவர் பொறுப்பேற்பார். இந்தியா, உலகளவில் எங்களது நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி சந்தையாக இருப்பதால் அதிக கவனம் செலுத்துகிறோம்.

பல பிரிவுகளிலான நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த அனுபவம் பெற்றிருக்கும் பார்த்தா, இப்பிராந்தியத்திற்கான ஸ்டெல்லான்டிஸின் பொறியியல், வடிவமைப்பு மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாடு செயல்பாடுகளை வழிநடத்த மிகச்சரியான நிர்வாகியாக இருக்கிறார். இந்தியாவில் ஜீப் பிராண்டின் உள்ளூர்மயமாக்கப்பட்ட தயாரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதில் டாக்டர். பார்த்தா முக்கிய பங்கு வகித்தார், மேலும் இப்பிராந்தியத்திற்கான தயாரிப்பு செயல்பாட்டு யுக்தியை செயல்படுத்தும் குழுவிற்கு இவர் தலைமையேற்று வழிநடத்துவார்.மேலும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு செயல்படுத்துவார் என்று ஸ்மைலி கூறினார்.

ரோலண்ட் மற்றும் டாக்டர். பார்த்தா ஆகிய இருவரும் தங்கள் புதிய பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க