• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

December 8, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பி.கே.புதூர் பகுதியில் 2.95 கோடி மதிப்பில் குனியமுத்தூர் இடையர்பாளையம் முதல் கோவைப்புதூர் வரையிலான நான்கு வழித்தடத்தை, பல்வழித்தடமாக மேம்படுத்துவதற்கான பூமிபூஜையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் பல்வேறு சாலை விரிவாக்கத்தினால் விபத்துகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலை, பால வேலைகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் கட்சி, சாதி வேறுபாடு இன்றி சகோதத்துவத்துடன் பழகி வருகிறேன் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி,

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது. அந்த ஆலையை திறக்க முயற்சி என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துகள் பரப்படுவது குறித்த கேள்விக்கு, இது ஆரேக்கியமாக இருக்காது எனவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் தமிழகத்தை பொறுத்தவரை எந்த வித சாதிய வேறுபாடு இன்றி இருந்து வருகிறோம் என்றும் கூறினார்.

மேலும் படிக்க