June 7, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளதாகவும், மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா அல்லது பணமா என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் வளரும் பிள்ளைகளை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம்.மத்திய அரசு திணித்த நீட் என்கிற மரண கயிறு தமிழக பிள்ளைகளின் கனவை சிதைத்து வருகிறது.தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் வெளி நாடுகளில் புகழ்பெற்ற மருத்துவர்களால் உள்ளனர்.
12ஆம் வகுப்பில் 91.9% தேர்ச்சி பெற்ற தமிழகம் நீட்டில் 34 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,65% தேர்ச்சி பெற்ற மற்ற மாநிலங்கள் நீட்டில் முன்னிலையில் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும், தமிழக அரசின் ஆணை நிற்காது என பல்வேறு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும்,வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள் என்றும்,ஆலையை ஓட்ட முடியாது என்றும், ஆலை இருக்காது எனக் கூறினார்.