• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி

January 8, 2019 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது ஆலையை திறக்கலாம் என்று மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அறிக்கை அளித்தது.

இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

இதற்கிடையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலை திறப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்தது. அதேபோல் தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இவ்விரு வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆலையைத் திறக்கலாம். நிலத்தடி நீரை மாசுபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.மேலும் இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையையும் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் படிக்க