• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் – புகழேந்தி

May 29, 2018

சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எதிர் கொள்ள முடியாது என்பதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்று சீல் வைத்துள்ளனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.

கோவையில் முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை உட்பட 50 அமமுக வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கின்றது.காவல் துறையினர் மனசாட்சி இல்லாமல் செயல்படுகின்றனர்.

18 எம்.எல்.ஏ க்கள் தீர்ப்பு வந்த பின்னர் காட்சிகள் மாறும்,அப்போது தவறு செய்த அதிமுகவினர் ஜெயிலுக்கு போவார்கள்.தூத்துக்குடியில் போராடியவர்கள் தீவிரவாதிகள் என்று சொன்னால், இறந்தவர்களுக்கு எதற்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுகின்றது.தூத்துக்குடி பிரச்சினையில் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் ஒடுக்கப்படுகின்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பிரதமர் இதுவரை கருத்து தெரிவிக்காமல் ஏன் அமைதியாக இருக்கின்றார்.நடிகை ஸ்ரீ தேவிக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் ஏன் 13 பேரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்லும் போது ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை.

ஆட்சியாளர்கள் எல்லா கட்சி தலைவர்களையும் கூட்டிக்கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தயாரா? எனவும் தூத்துக்குடி இன்னும் அமைதியான நிலைக்கு வரவில்லை எனவும் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகின்றது என குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க