March 28, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், மக்கள் போராட்டத்தை ஊடகங்கள் வெளியிட மறுப்பதாக கூறி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(மார்ச் 28)போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி சாலையில் உள்ள தனியார் நாளிதழ் அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.மேலும் சில ஊடகங்கள் போராட்டத்தை மூடி மறுப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.