May 7, 2021
தண்டோரா குழு
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து,கோவை மேற்கு மாநகர் மாவட்டம்,இடையர் பாளையம் பகுதியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது சட்டசபை தலைவராக திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அவர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை மேற்கு மாநகர் மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி எட்டாவது வட்டக் கழகம் சார்பாக செயலாளர் வெற்றிவேல் தலைமையில் இடையர்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக உறவுகள் பின்பற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.