June 13, 2018
தண்டோரா குழு
ஸ்டாலின் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்காக காரணங்களை தேடி கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எஸ்.வி.சேகர் பற்றி ஸ்டாலின் பேச சபாநாயகர் தொடர்ந்து அனுமதிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்,
அரசின் ஆக்கப்பூர்வ திட்டங்களுக்கு எதிர்க்கட்சியான திமுக ஆதரவாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்குள் கடமை போன்றே எதிர்க்கட்சிக்கும் கடமை உள்ளது.மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி சேகர் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக 89 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றார்.மேலும், மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினரை,கர்நாடக அரசு நியமிக்காதது குறித்து மு.க.ஸ்டாலின் குரல் எழுப்பாதது ஏன் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.