March 26, 2018
தண்டோரா குழு
சொடக்கு போட்டால் ஆட்சி கவிழும் என்று பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, கடப்பாரையை வைத்து நெம்பினாலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று கூறினார்.
இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
கடப்பாரையை வைத்து நெம்பினாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அதிகாரத்தை பெறுவதே திமுகவின் குறிக்கோள்.அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை. இன்னும் 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.