August 20, 2018
தண்டோரா குழு
திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 28ல்சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
கழக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ல்சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணியளவில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், இக்கூட்டத்தில் தணிக்கை குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.