• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்டாலின் குறுக்குவழியில் ஆட்சி அமைக்க நினைத்தால் நிறைவேறாது சூலூரில் ஓபிஎஸ் பேச்சு

May 12, 2019 தண்டோரா குழு

கோவை சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து
ஜே கிருஷ்ணாபுரத்தில்
துணை முதலமைச்சர் ஓ பண்ணீர் செல்வம் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

இந்த தொகுதியில் கந்தசாமி வெற்றி பெற்ற பின் தேவைகளை அறிந்து செயல்படும் நல்ல சட்டமன்ற உறுப்பினராக கந்தசாமி இருப்பார்.
நல்ல தீர்ப்பை வழங்கும் இடத்தில் மக்கள் நீங்கள் இருக்கிறீர்கள்.

எதிர்கால சந்ததியினரும் முழுபயன்
பெறும் வகையில் திட்டங்களை வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.2023 ஆம் ஆண்டுக்குள் குடிசையில் வாழும் அனைத்து மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். இதுவரை 13 லட்சம் மக்களில் 6 லட்சம் பேருக்கு குடிசைக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

அணுக்கு நிகர் பெண் என அனைத்து திட்டங்களும் அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகம்தான் சாதனை படைத்த மாநிலமாக திகழ்கிறது.

திமுக ஆட்சி காலத்தில் என்ன திட்டம் செய்தார்கள் என சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை.திமுக ஐந்தாண்டுகளாக மின் தட்டுப்பாட்டுடன் ஆட்சி செய்தவர்கள். அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போயிவிடும் என்கின்றனர். 28 ஆண்டுகளாக எம்ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி செய்ய உரிமையை வழங்கிய நாடு தமிழ்நாடு.

திமுக ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு செய்யப்பட்டது அதனை மீட்டுத்தந்தவர் ஜெயலலிதா. இவ்வியக்கம் தொண்டர்களுக்காக செயல்படும் இயக்கம்.

எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இயக்கம். ஸ்டாலின் அவர்களே கருணாநிதியால்
முடியாத ஒன்று உங்களால் முடியவே முடியாது. ஸ்டாலின் குறுக்குவழியில் ஆட்சி அமைக்க நினைத்தால் நிறைவேறாது.

தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் நிறைந்திருந்தது திமுக ஆட்சியில்தான். பிரியாணிக்கு காசு கொடுக்காமல் பரோட்டாக்கு காசு கொடுக்காமல் திமுக வன்முறை கலாச்சாரத்தை கைவிடாமல் இருக்க கூடிய கட்சியாக உள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அனைத்து திட்டங்களும் இந்த ஆட்சி நிறைவாக செய்து வருகிறது. 32 ஆண்டுகளாக உடன் இருந்து அம்மாவை காப்பாற்ற முடியாதவர்கள் கட்சியை எப்படி காப்பாற்ற முடியும்.
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கொண்டு வரப்படும். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள் என ஓபிஎஸ் பேசினார்.

மேலும் படிக்க