January 3, 2021
தண்டோரா குழு
மதுரை பாண்டிகோவில் உள்ள துவாரகா பேலசில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
கலைஞரிடம் பொய் சொல்லி என்னை திமுகவில் இருந்து பிரித்துவிட்டார்கள்.திருமங்கலம் தேர்தலில் நான் வேலை பார்க்க வேண்டும் என்று கலைஞரும் இப்போதைய திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினும் என்னிடம் மன்றாடினார்கள்.திருமங்கலம் பார்முலா என்பது உழைப்பு-தான் ; பணமல்ல.திருமங்கலம் தேர்தல் வெற்றி பெற்றுக்கொடுத்ததற்காக என்னை வரவேற்க வெறும் 10 பேரை அனுப்பினார்கள்.அது இன்றைய தலைவர் செய்த சதி.பல வெற்றிகளை திமுகவிற்கு பெற்று கொடுத்ததுதான் நான் செய்த துரோகமா…?
மு.க.ஸ்டாலினுக்கு திமுகவில் பொருளாளர் பதவி பெற்றுக்கொடுத்ததே நான் தான்.
நான் பொய் சொல்லி பழக்கப்பட்டவன் அல்ல. தென்மண்டல அமைப்பு செயலாளருக்கு நிகராக ஸ்டாலின் பதவி பெற வேண்டும் என நினைத்தார்.கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் திமுகவின் தலைவர், முதல்வர் என அவரிடமே சொன்னேன்இதை மறுக்க முடியுமா ஸ்டாலின்…? அவரது மனசாட்சிக்கு தெரியும்
பின்னர் ஏன் எனக்கு ஸ்டாலின்துரோகம் செய்தார் என தெரியவில்லை.நான் என்ன தவறு செய்தேன்…?
நான் மத்திய அமைச்சர் ஆனதும், ஸ்டாலின் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என கேட்டார்.மு.க.ஸ்டாலின் ஒருநாளும் முதல்வராக முடியாது.எனது ஆதரவாளர்கள் ஸ்டாலினை முதல்வராக விட மாட்டார்கள். எந்நாளும் வருங்கால முதல்வரே என போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நான் முடிவு எடுப்பேன். எதற்கும் தயாராக இருங்கள்அது நல்ல முடிவோ, அல்லது கெட்ட முடிவோ, எந்த முடிவு எடுத்தாலும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.