November 18, 2021
தண்டோரா குழு
ஸ்கோடா கார் நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் இரண்டாவது அறிமுகமாக, ஸ்கோடா ஸ்லாவியா அறிமுகம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கோவையில் நடைபெற்றது.
ஸ்கோடா கார் நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் புதிய வரவாக ஸ்கோடா ஸ்லாவியா எனும் புதிய கார் அறிமுகமானது. மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவை தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கோவை சாய்பாபாகாலனி எஸ்.ஜி.ஏ ஸ்கோடா கார்ஸ் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேசிய,ஸ்கோடா ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் ஷாஃபர்,
புதிய ஸ்லாவியாவுடன் இந்தியா 2.0 தயாரிப்புப் பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்தை துவங்குவதாக கூறிய அவர், குஷாக் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து , தற்போது புத்தம் புதிய பிரீமியம் நடுத்தர அளவிலான செடான் மாடலாக, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஸ்லாவியா வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறுகையில்,
புதிய ஸ்லாவியா மாடல் அதிநவீன திறமையான என்ஜின்கள் மற்றும் எளிமையான அம்சங்களுடன் உள்ளதால் இது அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற இதில்,கோவை எஸ்.ஜி.ஏ.கார்ஸ் நிர்வாக இயக்குனர் அற்புதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.