March 24, 2026
தண்டோரா குழு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய குஷாக் காரின் விலையையும் வாடிக்கையாளர் டெலிவரி தொடக்கத்தையும் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய குஷாக், மதிப்பு, பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் திறன் ஆகியவற்றில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதோடு,ஐரோப்பிய தொழில்நுட்பத்தை அனைத்து வேரியன்ட்களிலும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் பிராண்டின் வியூகத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
புதிய எய்ட்-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ரியர் சீட் மசாஜர் போன்ற இந்த செக்மெண்டில் முதன்மையான தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தரமான அம்சங்களுடன், புதிய குஷாக் 1.0 டிஎஸ்ஐ மற்றும் குஷாக் 1.5 டிஎஸ்ஐ ஆகிய இரண்டும் ஐரோப்பிய பொறியியல் மற்றும் 5-ஸ்டார் பாதுகாப்பை இந்திய சாலைகளில் எளிதில் கிடைக்கச் செய்யும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா -வின் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. புதிய குஷாக் ஐந்து மாடல்களில் கிடைக்கிறது: கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ. இவை மேனுவல் மற்றும் ரியல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்ட டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகின்றன.
வாடிக்கையாளர்கள் கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், பிரில்லியண்ட் சில்வர், லாவா புளூ, டீப் பிளாக் மற்றும் மூன்று புதிய பின்வரும் நிறங்கள் உள்ளிட்ட எட்டு நிறங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்: ஷிம்லா கிரீன், ஸ்டீல் கிரே மற்றும் செர்ரி ரெட். புதிய குஷாக் 1.0 டிஎஸ்ஐ ரேஞ்சின் தொடக்க விலை ரூ.10,69,000 ஆகும். செயல்திறனை விரும்புபவர்களுக்காக, மிகவும் பாராட்டப்பட்ட செவன்-ஸ்பீடு டிஎஸ்ஜி கொண்ட புதிய குஷாக் 1.5 டிஎஸ்ஐ ரூ.18,79,000 விலையிலிருந்து கிடைக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் டைரக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில்,
“ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் எங்களது கவனம் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை பரவலாக்குவதும்,அதை அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதும்தான்.புதிய குஷாக் மூலம் அனைத்து ரகங்களிலும் மதிப்பை நாங்கள் உண்மையாகவே மறுவரையறை செய்கிறோம்.புதிய குஷாக் அதன் அனைத்து வேரியன்ட்களிலும் போட்டித்தன்மை வாய்ந்த விலை, மேம்படுத்தப்பட்ட தரமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்த செயல்திறன் மூலம் முன்னிலை வகிக்கிறது.
எய்ட்-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ரியர் சீட் மசாஜர் போன்ற இந்த செக்மென்டில் முதன்மையான வசதிகள் மற்றும் அவசியமான அம்சங்களை தரநிலையாக்கியது ஆகியவை ஆரம்பநிலை வேரியண்டிலிருந்தே மிகச்சிறந்த மதிப்பை வழங்குகின்றன.புதிய குஷாக் இப்போது ஸ்கோடா சூப்பர் கேர் உடன் வருகிறது:நீண்ட கால நிம்மதிக்காக 4 ஆண்டுகள்அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரன்டி மற்றும் 4ஆண்டுகளுக்கான ரோட்சைடு அசிஸ்டன்ஸ் ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக,வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது 30,000 கிலோமீட்டர் வரை நான்கு இலவச லெபர் ஃப்ரீ சர்வீஸ் பலன்களைப் பெறலாம்.
இந்த வாரன்டியை கட்டண அடிப்படையில் எட்டாவது ஆண்டு வரை நீட்டிக்க முடியும். இத்துடன் ஆறு ஆண்டுகளுக்கான கொரோஷன் வாரன்டி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பெயிண்ட் வாரன்டியும் வழங்கப்படுகிறது.