• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கேட்டிங் செய்த படி, கையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி

February 20, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, யாசா ,15 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்த படி, கையில் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த மதன்,மகாலட்சுமி தம்பதியினரின் மகள் யாசா. ஒண்பதாம் வகுப்பு மாணவியான இவர்,மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தில், கராத்தே பயிற்சியுடன் சிலம்பம்,ஸ்கேட்டிங் விளையாட்டை முறையாக கற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு சாதனையாக மாணவி யாசா பதினைந்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்தபடி ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். முன்னதாக இதற்கான துவக்க நிகழ்ச்சி, சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள இயணன் சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,கவுன்சில் ஹெட் ஹரி பிரகாஷ், இயணன் பள்ளி தாளாளர் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை துவக்கி வைத்தனர்.போக்குவரத்து நிறைந்த சாய்பாபா காலனி வீதிகளில் ஸ்கேட்டிங் செய்தபடி சிலம்பம் சுற்றி வலம் வந்த சாதனை மாணவியை தீர்ப்பாளர்கள் அரவிந்த் மற்றும் சிவமுருகன் கண்காணித்தனர்.

மாணவி யாசாவை சாலையில் செல்வோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.மாணவியின் இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.தொடர்ந்து அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை தியாகு நாகராஜ் வழங்கினார்.ஏற்கனவே பத்து கிலோ மீட்டர் தூரம் செய்த சாதனை யாசா தனது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க