• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை

July 2, 2025 தண்டோரா குழு

கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாயம் சார்ந்த சமூகங்களுக்காக ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரட்டை பலன் காப்பீட்டுத் திட்டமான ” ஷேமா கிசான் சாத்தி ” திட்டத்தை வழங்குவதற்கு ஒரு உத்தி மிகுந்த பேங்க்கஸுரன்ஸ் கூட்டணியை அறிவித்துள்ளன.

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான நிதி பாதுகாப்பு நலன்களுடன் அதிகாரம் அளிக்க, கேவிபி-இன் கிராமப்புற மற்றும் புறநகர் வங்கி செயல்பாடுகளில் ஒரு வலுவான ஆதிக்கம் மற்றும் ஷேமா நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த காப்பீட்டுத் தீர்வுகள் ஆகியவற்றை இந்த கூட்டாண்மை ஒருங்கிணைக்கிறது.இந்தக் கூட்டாண்மை இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான கேவிபி இன் நீண்டகால உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக் காட்டுகிறது.

விவசாய சமூகத்திற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்புடன், இந்தியாவின் பேங்க்கஸுரன்ஸ் துறையில் ஒரு உத்தி மிகுந்த கூட்டாண்மை மூலம் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இரண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் இந்த கூட்டு முயற்சி வெறும் கூட்டாண்மையை விட மிகச்சிறந்தது. ஷேமா நிறுவனத்தின் தொழில்நுட்ப இருப்பையும், கேவிபி-இன் கிராமப்புற வாடிக்கையாளர் தளத்தையும் பெரிய அளவிலான தொடர்புகளுக்குப் பயன்படுத்தி, வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல், காப்பீடு செய்தல், உயர்த்துதல் ஆகியவற்றின் ஒரு நோக்கமாக இது இருக்கிறது.

காப்பீட்டை மட்டுமல்லாமல், முன்னெச்சரிக்கை நிலைப்புத்தன்மை, தயார்நிலை மற்றும் நிலைத்தன்மைக்கான கருவிகளையும் வழங்குவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்திற்கான கேடயமாக செயல்படுவதற்கு, ஷேமா நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.

இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய கரூர் வைஸ்யா பேங்க் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. ரமேஷ் பாபு கூறுகையில்,,

“ஷேமா கிசான் சாத்தி திட்டத்தின் மூலம், நாங்கள் வழங்குவது வெறும் காப்பீட்டுத் திட்டத்தை மட்டுமல்ல நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் அர்த்தமுள்ள நிதி சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. என்றார்.

இந்த கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் நுக்கலா கூறுகையில்,

“கேவிபி-ன் வாடிக்கையாளர்களுக்கு பயிர் காப்பீடு மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு ஆகிவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த முன்னோடி பேங்க்கஸுரன்ஸ் திட்டம், வாழ்வாதாரம் மற்றும் குடும்பத்திற்கான இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது. ஷேமா கிசான் சாத்தி திட்டமானது, கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்ற அதே வேளையில் லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோருக்கு நிதி பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் தன்னிறைவு ஆகிய இரட்டை நோக்கங்களை அடையவும், வடிவமைக்கப்பட்டது. என்றார்.

மேலும் படிக்க