April 27, 2021
தண்டோரா குழு
இயக்குனர் இமயம் பாரதி ராஜா மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்த படம் ரெட்டைசுழி. இப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி நடித்த ஆண்தேவதை படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட
இயக்குநர் தாமிரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.