• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வ.ஊ.சி பூங்காவில் 33 குட்டிகளை ஈன்ற கண்னாடி விரியன் பாம்பு

August 8, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வ.ஊ.சி பூங்காவில் கண்னாடி விரியன் ஒன்று பாம்பு 33 குட்டிகளை ஈன்றுள்ளது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் முதலை,கிளி,குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இதனை காண வார விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம் முதலாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவதில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டி போடும் இனத்தை சேர்ந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 33 குட்டிகளை ஈன்று உள்ளது.

இது குறித்து பூங்கா இயக்குனர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில்,

33 குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், இதனை சில நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் விட உள்ளதாக கூறினார். மேலும் இங்கு சாரை,நாகம்,பச்சை பாம்பு, மலை பாம்பு உள்ளிட்ட 34 வகையான பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க