• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வ.உ.சி பூங்காவில் மீண்டும் ரயில் சேவை துவங்க திட்டம்

May 7, 2022 தண்டோரா குழு

வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு ரயில் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் உள்ளே சிறிய ரக பொழுதுபோக்கு ரயில் சேவை உள்ளது. கொரோனா தொற்று பரவலின்போது கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவையானது, இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது ரயில் சேவையை இடமாற்றம் செய்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘இந்த ரயில் விரைவாக பழுது நீக்கம் செய்யப்படும். வ.உ.சி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் அருகில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா வளாகத்துக்கு இந்த ரயிலை இடமாற்றம் செய்து தனியாக இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவாக இந்த பொழுதுபோக்கு ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,’’என்றார்.

மேலும் படிக்க